சீவக சிந்தாமணி 1701 - 1705 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1701 - 1705 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1701. ஊன் தகர்த்த அனைய போன்றும் ஊடு எரி முளைப்ப போன்றும்
தோன்று பூ இலவத்து அங்கண் தொகை அணில் அனைய பைங்காய்
கான்ற மென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை யாழ் கை நீக்கித்
தேன் தயங்கு இணர் பெய் கோதை சிந்தையின் நீட்டினாளே

விளக்கவுரை :

1702. நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
கண் மனம் கவற்றிய காமர் தொண்டை வாய்
அண்ணலை நினைந்து வெய் துயிர்ப்ப ஆய் நலம்
வண்ணத்தின் மழுங்கி வாள் கண்ணி வாடினாள்

விளக்கவுரை :

[ads-post]

1703. மின் தவழ் மணி வரை மாலை மார்பனைப்
பொன் தவழ் இள முலை பொருது புல்லும் நாள்
என்று கொல் என நினைந்து இருந்த செவ்வியுள்
சென்றனன் சீவகற்கு இளைய செல்வனே

விளக்கவுரை :

1704. ஐ விலின் அகல நின்று ஆங்கு அடி தொழுது இறைஞ்சினாற்கு
மை விலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கிக்
கை விலும் கணையும் இல்லாக் காமன் போந்து இருக்க என்ன
மொய் வெல்லும் குருதி வேலான் மூவில் கண் இறைஞ்சி நின்றான்

விளக்கவுரை :

1705. திங்கள் வாள் முகமும் நோக்கான் திருமுலைத் தடமும் நோக்கான்
அம் கதிர்க் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான்
செங் கயல் கண்ணினாள் தன் சீறடிச் சிலம்பு நோக்கி
எங்கு உளார் அடிகள் என்னா இன்னணம் இயம்பினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books