சீவக சிந்தாமணி 1696 - 1700 of 3145 பாடல்கள்
1696. வெள்ளி வெண் மலைக்கு வேந்தன் ஒருமகள் வேல் கண் பாவை
ஒள் இழை அவளைக் கேட்பான் உறுவலி செல்லும் ஆங்கண்
வள் இதழ் கோதை தானே இட்டது ஓர் வண்ணம் தன்னைக்
கொள்ளத் தான் முரலல் உற்றுக் கோலமை வீணை கொண்டாள்
விளக்கவுரை :
1697. ஆடகச் செம் பொன் ஆணி ஆன் நெய் வார்ந்து அனைய நுண்கோல்
மாடகம் நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கிச்
சூடகம் அணிந்த முன் கைத் தொகு விரல் சேப்ப எற்றித்
தோடு அலர் கோதை கீதம் துணிவினில் பாடுகின்றாள்
விளக்கவுரை :
[ads-post]
1698. இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து கையின்
நறு மலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்
நண்ணார் துறப்ப நனி வளையும் தோள் துறப்பக்
கண் ஓவா முத்து உறைப்பத் தோழி கழிவேனோ
விளக்கவுரை :
1699. பூமாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல்
ஏமாராது என்று இனைவார் எண்ணார் துறந்தார்
எண்ணார் துறப்ப இன வளையும் தோள் துறப்ப
மண்ணார் வேல் கண் துயிலா தோழி மருள்வேனோ
விளக்கவுரை :
1700. வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று பூ மாலை
கொண்டு ஓச்சும் காதலார் கூடார் துறந்தார்
கூடார் அவர் துறப்பக் கோல் வளையும் தோள் துறப்பத்
தோடார் பூங் கண் துயிலா தோழி துயர்வேனோ
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1696 - 1700 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books