சீவக சிந்தாமணி 1691 - 1695 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1691 - 1695 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1691. ஒப்பு இணை தனக்கு இலாதான் உறுவரை அகலம் மூழ்கிச்
செப்பு இணை அனைய செங் கேழ் வன முலை பொருது சேப்பக்
கற்பக மரத்தைப் புல்லிக் கை விடாது ஒழிந்து காமத்
துப்புரவு உமிழும் காம வல்லியின் தோற்றம் ஒத்தாள்

விளக்கவுரை :

1692. காய்வுறு வேட்கை தன்னால் கங்குலும் பகலும் விள்ளான்
வேய் வெறுத்து அமைந்த தோளான் விழுத்திரை அமுதம் என்று
சேய் நலம் கடந்த செல்வன் திரு நலம் தெளித்திட்டு ஆற்ற
வாய் விடாள் பருகி இட்டாள் மடக் கிள்ளை மருட்டும் சொல்லாள்

விளக்கவுரை :

[ads-post]

1693. திரை இடைக் கொண்ட இன்னீர் அமுது உயிர் பெற்றது என்னும்
உரை உடைக் கோதை மாதர் ஒளி நலம் நுகர்ந்து நாளும்
வரை உடை மார்பன் அங்கண் வைகினன் என்ப மாதோ
கரை கடல் அனைய தானைக் காவலன் காதலானே

விளக்கவுரை :

1694. வாளினால் மிடைந்த கண்ணாள் வருமுலைத் தடத்துள் வைகித்
தோளினால் மிடைந்து புல்லித் தொண்டை வாய் அமுதம் மாந்திக்
காளை செல்கின்ற நாளுள் கட்டியங் காரன் மூதூர்
மீளி வேல் குருசிற்கு உற்றார்க்கு உற்றது விளம்பல் உற்றேன்

விளக்கவுரை :

1695. வெண் மதி இழந்த மீன் போல் விடலைக்குத் தம்பி மாழாந்து
ஒண் மதிச் சூழ்ச்சி மிக்கான் உள் உழி உணர்தல் செல்லான்
புள் மதித்து உடைந்த போது பொழிந்து மட்டு ஒழுகும் நல்நாட்டு
உள்மதி வருந்த நாடி ஒளி நகர் எய்தினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books