சீவக சிந்தாமணி 1686 - 1690 of 3145 பாடல்கள்
1686. பூவியல் கோயில் கொண்ட பொன் அனாள் அனைய நங்கை
காவியம் கண்ணி வந்து பிறத்தலும் கணிகள் ஈண்டி
மூவியல் திரிதல் இன்றிச் சாதக முறையில் செய்தார்
ஏவியல் சிலையினாய்க்கே உரியள் என்று உரைப்ப நேர்ந்தான்
விளக்கவுரை :
1687. வார் உலாம் முலையினாட்கும் வரிசிலைத் தடக்கை யாற்கும்
சீர் உலாம் கோலம் செய்தார் செப்பினார் வதுவை நல் நாள்
பார் எலாம் அறிய நின்று படா முரசு ஆர்ப்பத் தீ வேட்டு
ஏர் உலாம் கோதை இன்பத்து இள நலம் பருகுகின்றான்
விளக்கவுரை :
[ads-post]
1688. முலைக் கடாக் களிறு முத்தம் சூட்டிய ஓடை பொங்க
நாண் எனும் தோட்டி மாற்றி ஆட்டிய சாந்தம் என்னும்
முக படாம் அழித்து வெம்போர் ஓட்டற ஓட்டிப் பைந்தார்
உழக்கி இட்டு வந்த அன்றே
விளக்கவுரை :
1689. ஒண் மணிக் குழை வில் வீச ஒளிர்ந்து பொன் ஓலை மின்ன
வண்ண மேகலைகள் ஆர்ப்ப வான் சிலம்பு ஒலிப்ப முத்தும்
கண்ணியும் பசும் பொன் நாணும் கதிர் முலை புடைப்பக் காமர்
அண்ணல் அம் குமரன் தன்னொடு ஆயிழை ஆடினாளே
விளக்கவுரை :
1690. மூசுதேன் வாரி அல்குல் பட்டபின் முலைகள் என்னும்
மாசு அறு கந்தின் மென் தோள் மணித் தொடர்க் கொளுத்தி வாள்கண்
ஆசு அறு வயிரத் தோட்டி நுதல் அணிந்து அமுதச் செவ்வாய்
காசு அறு கவளம் ஆகக் களிறு கோள் பட்டது அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1686 - 1690 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books