சீவக சிந்தாமணி 1681 - 1685 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1681 - 1685 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1681. விசயனே விசயன் வில் போர்க் கதம்பனே முருகன் வேல் போர்த்
திசை எலாம் வணக்கும் வாள் போர்க்கு அந்தணன் செம் பொன் நாமன்
அசைவு இலான் யானைத் தேர்ப் போர்க்கு அலசனே அசல கீர்த்தி
வசை இலான் புரவிச் சேன் என்று யாவரும் புகழப் பட்டார்

விளக்கவுரை :

1682. காவலன் மக்கள் ஆக்கம் கண்டு கண் குளிர்ந்து நோக்கி
ஏவலான் அரசன் ஒன்றோ இரு பிறப் பாளன் அல்லார்க்கு
ஆவது அன்று இன்ன மாட்சி அவனை யான் நிகளம் பெய்து
காவல் செய்திடுவல் வல்லே காளையைக் கொணர்மின் என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1683. கல்வியும் கொடிது போலும் காவலன் காளை தன்னை
ஒல்லலன் சிறை செய்கின்றான் என்றவன் கருதிற்று ஓரார்
பல்சனம் பரிந்து நிற்பப் பார்த்திப குமரன் சேர்ந்தான்
வில் வலான் கொண்டு வேந்தன் வேறு இருந்து இதனைச் சொன்னான்

விளக்கவுரை :

1684. புள் முழுது இறைஞ்சும் கோட்டுப் பொரு களிறு அனைய தோன்றல்
மண் முழுது அன்றி வானும் வந்து கை கூடத் தந்தாய்
கண் முழுது உடம்பில் பெற்றேன் காளை கைம்மாறு காணேன்
பண் முழுது உடற்றும் தீம் சொல் பாவை நின் பாலள் என்றான்

விளக்கவுரை :

1685. முடி கெழு மன்னன் சொல்ல மொய் கொள் வேல் குருசில் தேற்றான்
வடிவமை மனன் ஒன்று ஆக வாக்கு ஒன்றா மறுத்த லோடும்
தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கை பற்றி
இடி முரசு அனைய சொல்லால் இற்றென விளம்பு கின்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books