சீவக சிந்தாமணி 1676 - 1680 of 3145 பாடல்கள்
1676. பொரு சரம் சலாகை வெய்ய புகன்றனர் துரக்கு மாறும்
வருகணை விலக்கு மாறும் வாள் அமர் நீந்து மாறும்
கருவியுள் கரக்கு மாறும் கணை புறம் காணு மாறும்
விரிய மற்று அவர்க்குக் காட்ட வீற்று இருந்து அவரும் கற்றார்
விளக்கவுரை :
1677. வேல் உடைத் தடக்கையார்கள் வேழ மேல் சென்றபோழ்தில்
கால் இடைக் கரக்கு மாறும் கை இடைத் திரியு மாறும்
வால் இடை மறியுமாறும் மருப்பு இடைக் குளிக்கு மாறும்
நூல் இடைக் கிடந்த வாறே நுனித்தவன் கொடுப்பக் கொண்டார்
விளக்கவுரை :
[ads-post]
1678. கொடி நெடுந் தேரின் போரும் குஞ்சரம் குறித்த போரும்
கடு நடைப் புரவிப் போரும் கரப்பறக் கற்று முற்றி
இடன் அறிந்து இலங்கும் வை வாள் இரும் சிலை குந்தம் மூன்றும்
உடன் அறிந்து உம்பரார்க்கு உரைப்பருந் தகையர் ஆனார்
விளக்கவுரை :
1679. தானையுள் அன்றி நின்ற தனி இடம் ஒற்றி மன்னர்
தானை மேல் சென்ற போழ்தும் வென்றியில் தளர்தல் இன்றித்
தானையை உடைக்கும் வெம் போர்த் தருக்கினார் மைந்தர் என்று
தானை சூழ் மன்னற்கு உய்த்தார் மன்னனும் தருக என்றான்
விளக்கவுரை :
1680. மழையொடு சூழ்ந்து கொண்ட வான் துகள் சிலையின் நீக்கிக்
குழை முகம் நெற்றி நக்கக் கோல வில் பகழி வாங்கி
இழை பக இமைப்பின் எய்திட்டு எறிந்து மின் திரிவவே போல்
விழைவுறு குமரர் புக்குச் சாரியை வியத்தர் ஆனார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1676 - 1680 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books