சீவக சிந்தாமணி 1671 - 1675 of 3145 பாடல்கள்
1671. நீர் செய் காந்த மணி கூந்தளம் பாவை நீண்டு அழகிய
ஏர் செய் சாந்தின் கழுநீர் விரை கமழும் பூக்கள் கோத்த
வார் செய் தண் தாமரை வளை அமை வரையின் வெள் அருவி நீர்
சீர் செய் கோமகளைச் சேர்த்தினாள் சீதம் செய்யாது ஒழிந்தனவே
விளக்கவுரை :
1672. பவ்வத் தங்கண் பிறந்து பனி பெயர்க்கும் தண் ஊற்றது ஆகி
எவ்வம் மன்னர் பட உலகம் விற்கும் அருமணியினைச்
செவ்வன் நூலில் சித்திரிக்கப் பட்ட அதனைச் சேர்த்திப் பின்னும்
மவ்வல் நாறும் குழலாட்கு மற்றும் இவைகள் நாடினாள்
விளக்கவுரை :
[ads-post]
1673. களிசெய் கோசிக நீர் விழக் கடி மாலை மேல் தொடர்ந்து கீழ்
நளி செய் தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி நல் நீர் பிலிற்றும் வாய்க்
குளிர் கொள் சாந்து ஆற்றி பொன் ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீசச்
சளிகொள் சந்தின் கொழுஞ் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள்
விளக்கவுரை :
1674. கொம்மை வெம் முலையில் சாந்தம் குளிர் செயாது ஆவி வாட்ட
அம் மென் மாலை முகம் கரிய நீர் துளும்ப நின்று நீடி
வெம்மை மிக்கது வீரன் தொடுத்த விளங்கு மாலை
பொம்மல் ஓதிக்குத் தானே துணை ஆம் புணை ஆயிற்றே
விளக்கவுரை :
1675. வாசநீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து
ஓசனைக் கண் உடையும் நெடுங் கண் கனகமாலை
தாசி தூது ஆகத் தாமம் புணை ஆகச் செல்லும் நாளுள்
காசில் கல்விக் கடலைக் கரை கண்டார் காளை மாரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1671 - 1675 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books