சீவக சிந்தாமணி 1666 - 1670 of 3145 பாடல்கள்
1666. காதலான் காதல் போல அகன்று நீண்டு அலர்ந்த வாள் கண்
போது உலாம் கோதை மாதர் புனைந்து அலர் தொடுத்த மாலை
ஆதலால் அலரது ஆகாது ஒழியுமே அழுங்கல் என்று
மாது உலாம் மழலைச் செவ்வாய் மடக்கிளி மொழிந்தது அன்றே
விளக்கவுரை :
1667. என்னை உள்ளம் பிணித்து என் நலம் கவர்ந்த ஈர்ந் தாரினான்
தன்னை யானும் பிணிப்பேன் எனத் தன் மணிச் செப்பினுள்
மன்னும் மாலை கொடுத்து அவனுக்கு உய்த்து ஈ எனத் தொழுது கொண்டு
அன்னம் என்ன ஒதுங்கிச் சிலம்பு அரற்றச் சென்று அணுகினாள்
விளக்கவுரை :
[ads-post]
1668. அணுகி முன் நின்ற அநங்க விலாசினி அம் கை கூப்பிப்
பிணையல் நீட்டப் பெருந் தகை அஃது ஏலான் முகம் நோக்கலும்
துணையில் தோகை என் நங்கைக்குத் தொங்கல் தொடுப்பாயும் நீ
மணி செய் மென் தோள் மருந்து நீ ஆருயிரும் நீயேல் என்றாள்
விளக்கவுரை :
1669. மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே
என்ன அஞ்சினாய் என்று அவனை நக்காட்கு அஃது அன்று கோதாய்
இன்ன கொள்கையேற்கு ஏலாது என்ன இலங்கு எயிற்றினாள்
அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான்
விளக்கவுரை :
1670. குலிகம் ஆர்ந்த கொழுந் தாமரை அன்ன வண் கை நீட்டி
ஒலியல் ஏற்றான் இஃது ஊழ் வினையால் உள்ளம் சுடுமால் என்ன
இலை கொள் பைம் பூண் இளமுலையாள் போகிக் கனக மாலை
மெலிய வெம்பி நைகின்றாள் உய்யும் வகை தொடங்கினாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1666 - 1670 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books