சீவக சிந்தாமணி 1661 - 1665 of 3145 பாடல்கள்
1661. வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள் வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள்
முருந்தின் காறும் கூழையை முனிவார் நின்னை என் முனிவார்
பொருந்திற்று அன்றால் இது என்னாய் பொன்றும் அளித்து இவ் உயிர் என்னாய்
திருந்து சோலைக் கருங் குயிலே சிலம்ப இருந்து கூவுதியால்
விளக்கவுரை :
1662. பெரு வெண் திங்கள் மால் அகப்பூ மலைந்து பெட்ப நகுகின்றது
உருவு கொண்ட குரல் அன்றில் உயிர் மேல் ஆம்பல் உலாய் நிமிரும்
ஒரு பெண் பாலேன் யான் ஆக உலகம் எல்லாம் பகை ஆகி
எரிகொன்று ஈன்ற இலைப் பலிபோல் இருத்தியால் என் இன்னுயிரே
விளக்கவுரை :
[ads-post]
1663. வேம் என் நெஞ்சம் மெய் வெதும்பும் விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும்
பூ மென் குழலார் புறம் நோக்கி நகுவார் நகுவது ஆயினேன்
தாம மார்பன் தான் புனைந்த தண் என் மாலை புணை ஆக
யாமக் கடலை நீந்துவேன் யாரும் இல்லாத் தமியேனே
விளக்கவுரை :
1664. செம் பொன் கடம்பன் செவ்வேலும் காமன் சிலையில் தொடுத்து அலர்ந்த
அம்பும் வென்ற வரி நெடுங் கண் அம் மாமதி வாள் முகத்தினாள்
வம்பு பூத்து முருகு உலாய்த் தேன் கொப்புளித்து நின்றது ஓர்
கொம்பு வெம் தீயிடைப் பட்டது ஒத்தாள் விரை செய் கோதையே
விளக்கவுரை :
1665. மணி நிற மாமை சாயல் வளையொடு வண்டு மூசும்
அணிநிறப் போர்வை ஆய அரும் பெறல் நாணும் விற்றுப்
பணி நலம் புதியது உண்டான் பன் மலர் மாலை கொண்டேன்
பிணி நிறப் புறஞ் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1661 - 1665 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books