சீவக சிந்தாமணி 1656 - 1660 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1656 - 1660 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1656. ஆம்பல் நாறும் அரக்கார் பவள வாயார் அமுதம் அன்னார்
பாம்பு பைத் தாங்கு அனைய பவழப் பட அரவு அல்குலார்
தாம்பலரும் மருட்ட அகில் தவழும் தண் பூவணைக்
காம்பின் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்பவே

விளக்கவுரை :

1657. ஆகம் தான் ஓர் மணிப் பலகையாக முலைகள் நாய் ஆகப்
போகக் கேற்ற புனை பவழ அல்குல் கழகம் ஆக
ஏக இன்பக் காமக் கவறாடல் இயைவது அன்றேல்
ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்பவே

விளக்கவுரை :

[ads-post]

1658. பின்னி விட்ட பிடித் தடக்கை இரண்டு போன்று திரண்டு அழகார்
கன்னிக் கலிங்கம் அகிலார்ந்து கவவிக் கிடந்த குறங்கினாள்
மின்னுக் குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி
என்னும் இமையாள் நினைந்து இருந்தாள் இயக்கி இருந்த எழில் ஒத்தாள்

விளக்கவுரை :

1659. கொடு வெம் சிலையைக் கொளை அமைத்துக் கொதி நீர்ப் பகழி கொளவாங்கிக்
கடு வெம் குறவன் எயப்பட்ட கன்னிப் பிணையின் நிலை கலங்கித்
தொடி தோள் நடப்பத் தோள் தேம்பத் துணை வெம் முலைகள் பசப்பு ஊர
நெடுமாத் தொகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள்

விளக்கவுரை :

1660. ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் உலகத்தை அங்காந்து
நின்றாற் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறு இலங்க
இன்றே குருதி வான வாய் அங்காந்து என்னை விழுங்குவான்
அன்றே வந்தது இம் மாலை அளியேன் ஆவி யாதாம் கொல்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books