சீவக சிந்தாமணி 1651 - 1655 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1651 - 1655 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1651. வெருகு வேட்பச் சிரிப்பன போல் முகைத்த முல்லை வெய்ய வாய்
அரவு பைத்து ஆவித்து அன்ன அம்காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன
குரவம் கொண்ட குறும் பூழ் போல் கொழுங்கால் முகை சுமந்தன
குருதிக் கூர் எயிறு கூத்தியர் கண் கொண்ட கொடித் தளவமே

விளக்கவுரை :

1652. சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ் பலவின் சூழ் சுளைகளும்
நன்மை நூலின் நயம் தோன்ற நன்பொன் விரல் நுதியினால்
பன் மணியும் முத்தும் பவளமும் பைம் பொன்னும் கோத்தால் ஒப்ப
என்ன அமரரும் மருளத் தொடுத்தான் இன மாலையே

விளக்கவுரை :

[ads-post]

1653. ஊன் உண் சிங்கக் குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான்
தேன் உண் போதின் பிணையலும் பந்தும் புனைந்து தேம் ஆர்ந்த
நானம் தோய்த்து நனை கலவை நாறும் மதம் தெளித்த பின்
பால் உண் தீம் சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள்

விளக்கவுரை :

1654. நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் மற்று எம்
கொடியிற்கு ஒத்த இவை என்றாள் நம்பியும் கொள்க என்றான்
வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண்
அடி அம் சிலம்பினாட்கு உய்த்து இறைஞ்சிக் காட்ட அவள் கொண்டாள்

விளக்கவுரை :

1655. கொண்டு கோதை மலர் எழுத்து மெல் விரலின் மேல் தாங்கி நோக்கும்
வண்டு சேர்ந்த குழலாள் வரும் முலைகள் பாய வண்தார்
விண்டு தேன் துளிப்ப வேல் தடம் கண் தாம் ஆடும் நாடகம்
கண்டு வாழாதவர் வாழ்க்கை எல்லாம் சவரர் வாழ்க்கையே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books