சீவக சிந்தாமணி 1646 - 1650 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1646 - 1650 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1646. அண்ணல் அம் சிலை வலாருள் அமோக மா ஆசானின் பின்
விண் நகு வெள்ளி வெற்பின் விஞ்சையர் உலகின் அல்லால்
மண்ணகத்து இல்லை என்பார் வாயினை மடங்க வந்தான்
புண்ணகத்து உறையும் வேலான் எனப் புகழ்ந்து அரசன் சொன்னான்

விளக்கவுரை :

1647. வில் திறல் நம்பி தேற்றான் விருந்தினன் இவனும் அன்றி
மற்றும் ஓர் நால்வர் உள்ளார் மாண்பினால் வளர்ந்தது இல்லை
கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் குறை எனக் குருசில் நேர்ந்தான்
அற்றை நாள் ஆதி ஆக அவர்களும் பயிலுகின்றார்

விளக்கவுரை :

[ads-post]

1648. கழலின் செந்தாமரை அடிகள் புல்லித் தம் காதல் கூர
நிழலின் நீங்கார் நினைத்தன நினைப்பின் அமைவான் ஆக்கி
அழலின் சாராது அகலாது ஒழுக ஒரு நாள் அவன் போகிப்
பொழிலின் மிக்கதனில் புக்கான் மணமகளிர் போல் பொலிந்ததே

விளக்கவுரை :

1649. பாசிப் பாசத்துப் பைம்பொன் நிரைத்தாலி பூத்த வேங்கை
மாசில் வெண் துகிலை நீர் தோய்த்து மேல் போர்த்த வண்ணமே போல்
காசில் மட்டு ஒழுகப் பூத்த அழிஞ்சில் கண் ஆர் கவின் கொண்டன
பேசில் செந்தலைய வெண் கறைய புன்கம் பொரி அணிந்தவே

விளக்கவுரை :

1650. கோடு தையாக் குழிசியோடு ஆரம் கொளக் குயிற்றிய
ஓடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம்
கூடு கோழிக் கொழு முள் அரும்பின அம் கோசிக
ஆடை பூத்தன பாதிரி வெண் கடம்பு பந்தணிந்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books