சீவக சிந்தாமணி 1641 - 1645 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1641 - 1645 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1641. எய்த அக் கணையும் மாவின் இருங் கனி அதுவும் பூமிக்கு
எய்த அச் சிலையின் எல்லை அணுகலும் ஏந்தல் நோக்கி
எய்த அவ் விடத்து நின்றே எய்த அத் தடக்கை கொண்டாற்கு
எய்தச் சென்று ஐயன் ஆரத் தழுவிக் கொண்டு இதனைச் சொன்னான்

விளக்கவுரை :

1642. வண் சிலை கொண்ட வாறும் வார்கணை தொடுத்த வாறும்
கண் கணை வைத்த வாறும் கல் செய் தோள் இருந்த வாறும்
திண்சரம் விட்டவாறும் சென்ற கோல் போந்த வாறும்
கண்டு எலாம் வியந்து நோக்கி வில் உடைக் கடவுள் என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1643. மரா மரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில்
இராமனை வல்லன் என்பது இசை அலால் கண்டது இல்லை
உரா மனம் இவன் கண் இன்றி உவக்குமா செய்வல் என்று
குராமலர்க் காவின் நீங்கிக் கோயிலே கொண்டு புக்கான்

விளக்கவுரை :

1644. வழிவரல் வருத்தம் ஓம்பி வயிரப் பூண் அணிந்த மார்பன்
அழிகவுள் யானை வேந்தற்கு அவன் திறம் அறியச் சொன்னான்
மொழி எதிர் விரும்பி மன்னன் மூரிவில் தடக்கை யாற்குக்
கழி பெரு முகமன் கூறிக் காதலம் காளை என்றான்

விளக்கவுரை :

1645. கிலுத்தம் கூர்ப் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து
நலத்தகு விரல்கள் ஐந்தின் இம்பர் மூ விரலின் நீளம்
சிலைத் தழும்பியானைத் தோலின் நூற்றுரை சிறு மீன் ஒத்த
இலக்கணக் கிடக்கை கண்டே ஏவினுக்கு அரசன் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books