சீவக சிந்தாமணி 1636 - 1640 of 3145 பாடல்கள்
1636. விண்டார்த் தேய்க்கும் வெம்பரி மான் தேர் விசயன் என்று
உண்டா நின்றான் தன் புகழ் ஊழி உலகு ஏத்த
வண்டார் சோலை வார் மணம் நாறப் புகுகின்றான்
கண்டான் சேர்ந்தான் காளையைக் கல்விக் கடலானே
விளக்கவுரை :
1637. இந்நாட்டு இவ்வூர் இவ்விடம் எய்தார் இவண் வாழ்வார்
எந்நாட்டு எவ்வூர் எப்பெயராய் நீ உரை என்றாற்கு
அந் நாட்டு அவ்வூர் அப் பெயர் அல்லாப் பெயர் சொன்னான்
பொய்ந் நாட்டேனும் பொய் அல ஆற்றால் புகழ் வெய்யோன்
விளக்கவுரை :
[ads-post]
1638. வாமான் திண் தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு எம்
கோமாற்கு உய்ப்பன் கொள் பயன் மிக்கோன் கொலை வேலான்
ஏ மாறு இல்லா இந்திரனேயும் இவன் ஒவ்வான்
போமாறு ஆய்வென் பொற்போடு கூடும் வகை என்றான்
விளக்கவுரை :
1639. பூங் கழலானைப் புண்ணிய நம்பி முகம் நோக்கி
ஈங்கு இது நின்நாடு இப் பதி நின் ஊர் இது நின் இல்
வீங்கிய திண் தோள் வெல் புகழாய் நின் கிளை என்றாற்கு
ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து ஆங்கு அமைக என்றான்
விளக்கவுரை :
1640. மன்னவன் சிறுவன் ஆங்கு ஓர் மாங்கனி உண்ணல் உற்று
மின் அவிர் கணையின் பல் கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்பப்
பொன் அவிர் கழலினான் அப் பொரு சிலை கணையின் வாங்கி
இன் அமிர்து ஊறுகின்ற இருங் கனி அற எய்திட்டான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1636 - 1640 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books