சீவக சிந்தாமணி 1631 - 1635 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1631 - 1635 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1631. காதலாள் உடலுள் உயிர் கைவிடின்
ஏதம் என் உயிர் எய்தி இறக்கும் மற்று
ஆதலால் அழிவு ஒன்று இலள் அல்லதூஉம்
மாதர் விஞ்சையும் வல்லளும் அல்லளோ

விளக்கவுரை :

1632. காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா
ஆதல் கண்ணகத்து அஞ்சனம் போலுமால்
தாது துற்றுபு தங்கிய வண்டு அனார்க்கு
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு அரோ

விளக்கவுரை :

[ads-post]

1633. நற வெம் கோதையர் நல் நலம் காதலான்
மற வெம் காமத்து வந்துற்ற தீவினைப்
பறவைத் தேர் நரகத்துப் பதைக்குங்கால்
அறிவன் அல்லது அங்கு ஆர் சரண் ஆகுவார்

விளக்கவுரை :

1634. வேட்கை ஊர்தர விம்முறவு எய்திய
மாட்சி உள்ளத்தை மாற்றி மலர்மிடை
காட்சிக்கு இன் பொய்கைக் காமர் நலன் உண்டு
மீட்டும் அங்கு இருந்தான் விடை ஏறு அனான்

விளக்கவுரை :

1635. நேரார் நேரும் நீள் நிதி துஞ்சும் நிறை கோயில்
ஆரா வெம் போர் ஆய் தடமித்தன் அரசற்கும்
நாரார் கற்பின் நாகிள வேய்த் தோள் நளினைக்கும்
சீரால் தோன்றிச் செல்வமோடு எல்லாம் திருத் தக்கான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books