சீவக சிந்தாமணி 1626 - 1630 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1626 - 1630 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1626. தன்னை யான் முகத்தை நோக்கின் தான் முலை முகத்தை நோக்கும்
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண்
பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இள முலையினாள் என்
முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்று கின்றாள்

விளக்கவுரை :

1627. பரிவு உற்றால் பயன் இன்றியும் பாவைமார்
முரிவு உற்றார்களின் மூர்ச்சனை செய்பவால்
பிரிவில் தோன்றிய பேர் அன்பு எனப்படும்
எரியின் மூழ்கி இறந்து படும் கொலோ

விளக்கவுரை :

[ads-post]

1628. வாளி அம்பு அன வாள் தடம் கண்ணி தன்
தோளும் மென் முலைப் பாரமும் தொல் நலம்
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுடப்
பூளை மெல் அணை மேல் புரளும் கொலோ

விளக்கவுரை :

1629. உருகி வாடி என் உற்றது கொல் எனக்
கருகி வாடிய காமரு கோதை தன்
இரு கண் நீரும் இடை முலை பாய்ந்து உகக்
குருகு பாய் தடம் ஆக அழும் கொலோ

விளக்கவுரை :

1630. வண்டு வாழ் பயில் கோதை மணம் முதல்
கண்ட ஞான்று தன் கண் எனும் கைகளால்
நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று
உண்டு என் ஆவி உருக்கி இடுவதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books