சீவக சிந்தாமணி 1621 - 1625 of 3145 பாடல்கள்
1621. புணர் மருப்பு யானையின் புயல்கொள் மும்மதம்
மணமகள் கதுப்பு என நாறும் மாநகர்த்
துணைமலர்க் கண்ணியும் செம்பொன் மாலையும்
இணைமலர்த் தாரினான் இடறி ஏகினான்
விளக்கவுரை :
1622. வண்டு கொப்புளித்து உணும் மாலை மார்பனைக்
கண்டு உவப்பு அளித்தவர் கடைக்கண் ஏக்கற
மண்டபப் பளிக்கு அறை மருங்கு ஒர் மா நிழல்
கொண்டு அவற்கு அளித்தது ஓர் குளிர் கொள் பொய்கையே
விளக்கவுரை :
[ads-post]
1623. வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடை அன்ன மடமை கூரத்
தண்கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணிக்
கண்டனம் கள்வ மற்று உன் காதலி தன்னை நீர்க் கீழ்ப்
பண்டையம் அல்லம் வேண்டா படுக்க என்று ஊடிற்று அன்றே
விளக்கவுரை :
1624. செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலின் அகலச் சேவல்
அயிர்ப்பது என் நின்னை அல்லால் அறியலேன் அன்றி மூக்கின்
உயிர்ப்பது உன் பணியினாலே ஊடல் நீ என்று பல்கால்
பயிர்ப்பு அறச் சிறகால் புல்லிப் பணிந்து பாண் செய்தது அன்றே
விளக்கவுரை :
1625. கலை உணர் மகளிர் நெஞ்சில் காமத்தின் கனிந்த ஊடல்
நிலை உணர் மைந்தர் நீக்கி நெறியினால் புணர்ந்தது ஒப்ப
அலர் மிசைப் பெடையின் ஊடல் அன்பு கொள் சேவல் நீக்கிக்
குலவிய புணர்ச்சி நோக்கிக் குன்று அனான் சிந்திக் கின்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1621 - 1625 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books