சீவக சிந்தாமணி 1616 - 1620 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1616 - 1620 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1616. கண் பயில் இளங் கமுகு எருத்தின் காய் பரீஇக்
கொண்டு இள மந்திகள் எறியக் கோட்டு இடைத்
திண் கனி முசுக்கலை சிதறும் தேம்பொழில்
மண்டு அமர் கடந்தவன் மகிழ்வொடு ஏகினான்

விளக்கவுரை :

1617. களிறு மாய் கதிர்ச் செந்நெல் கழனி நாட்டு இடை
ஒளிறு வேல் நரபதி நகரம் ஒய் எனப்
பிளிறு வார் இடி முரசு ஆர்ப்பப் பெய்கழல்
வெளிறு இலாக் கேள்வியான் விருப்பொடு எய்தினான்

விளக்கவுரை :

[ads-post]

1618. புற நகர் மண மகன் ஒருவன் போதர்வான்
இறை மகன் வினாயினான் என்ன பேரவே
துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என
அறிக என்று அலரி வாய் கமழக் கூறினான்

விளக்கவுரை :

1619. மத்திம தேசமாம் நாடு மற்று இந் நாட்டு
எத்திசை நிதியமும் இறை கொண்டு இல்லவர்க்கு
உய்த்தும் ஊர் கொடுப்பவரே ஏமமா புரம்
இத்திசைக்கு ஐய நீ புதியை போன்ம் என

விளக்கவுரை :

1620. அன்னதே என்றலின் அடிசில் காலமால்
என்னொடு பேசினாய் தவிர் மற்று ஈங்கு எனப்
பொன் நகர் புக்க பின் அறிவல் போக என்றான்
வில் மரீஇ வாங்கிய வீங்கு தோளினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books