சீவக சிந்தாமணி 1611 - 1615 of 3145 பாடல்கள்
1611. களிசேர் கணை உடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவாறு என்னே
விளக்கவுரை :
1612. இன்னணம் ஏத்தி இறைவன் அடி தொழுது
அன்னம் உறங்கும் மணிவரை மேல் நின்று
பொன்னம் கழலான் இழிந்து பொழி மழை
மின்னின் நடந்து மிகுசுரம் சென்றான்
விளக்கவுரை :
[ads-post]
1613. மாலைக் கதிர்வேல் மலங்க மணிமலர்க்கு
ஓலை விடுகண் உருகு கொடி இடை
ஏலம் கமழ் குழல் ஏழையவர் அன்ன
ஆலைக் கரும்பின் அக நாடு அணைந்தான்
விளக்கவுரை :
1614. வழைச்சறு சாடி மட்டு அயின்று மள்ளர் தாம்
கழைக் கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம்
மழைக் குரல் என மயில் அகவ வார் செந்நெல்
புழைக் கடைப் புனல் அலைத்து ஒழுகும் பொற்பிற்றே
விளக்கவுரை :
1615. தாமரை மலர் தலை அடுத்துத் தண் கமழ்
தூமலர்க் குவளை கால் அணைத்துத் தோல் அடிக்
காமரு பெடை தழீஇ அன்னம் கண்படும்
தேமலர்த் தடம் தழீஇத் திசைக்கண் மல்கின்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1611 - 1615 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books