சீவக சிந்தாமணி 1606 - 1610 of 3145 பாடல்கள்
1606. கருவித் தேன் கலை கையுறக் கீண்டுடன்
மருவிப் பைங்கறி வாரிப் பழம் தழீஇ
வெருவி நாகம் பிளிற்ற விரைந்து உராய்
அருவி நின்று அதிரும் ஒருபால் எலாம்
விளக்கவுரை :
1607. வெம் கதிர்க் கடவுள் வியன் தேர் வரைத்
தங்கு சந்தனக் கோட்டு இடைப் பட்டு எனப்
பொங்கு மான் குளம்பின் குடை பொன் துகள்
மங்குலாய்த் திசை யாவையும் அல்கின்றே
விளக்கவுரை :
[ads-post]
1608. சுனைய நீலமும் சுள்ளியும் சூழ்மலர்
நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர்ச்
சினைய சண்பகம் வேங்கையோடு ஏற்றுபு
முனைவன் மேல் துதி முற்று எடுத்து ஓதினான்
விளக்கவுரை :
1609. முனிமை முகடு ஆய மூவா முதல்வன்
தனிமைத் தலைமை தனது தான் என்ப
தனிமைத் தலைமை தனது தான் என்றால்
பனிமலர் தூய் நின்று பழிச்சவாறு என்னே
விளக்கவுரை :
1610. மலர் ஏந்து சேவடிய மால் என்ப மாலால்
அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப் படுவான்
அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப் படுமேல்
இலரே மலர் எனினும் ஏத்தாவாறு என்னே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1606 - 1610 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books