சீவக சிந்தாமணி 1601 - 1605 of 3145 பாடல்கள்
1601. பட்ட எல்லாம் பரியாது உரைத்தான் அவளும் கேட்டாள்
விட்டாள் ஆர்வம் அவன் கண் இவன் மேல் மைந்து உறவினால்
மட்டார் கோதை மனை துறந்தாள் மைந்தனும் மங்கை மேலே
ஒட்டி விள்ளா ஆர்வத்தனன் ஆகி உருவம் ஓதினான்
விளக்கவுரை :
1602. மெழுகு செய்படம் வீழ்முகில் மத்தகத்து
ஒழுகும் வெள் அருவித் திரள் ஓடை சூழ்ந்து
இழுகு பொன் மதத்தின் வரைக் குஞ்சரம்
தொழுது வேய் முதல் தூசம் கொண்டு ஏறினான்
விளக்கவுரை :
[ads-post]
1603. நிரைத்த தீவினை நீங்க நெடுங் கணார்
வரைக்கண் ஏறலின் வால் அரிப் பொன் சிலம்பு
உரைத்து மின் இருள் மேல் கிடந்தாலும் ஒத்து
அரைத்து அலத்தகம் ஆர்ந்தது ஒர் பால் எலாம்
விளக்கவுரை :
1604. சாந்தும் கோதையும் தண் நறும் சுண்ணமும்
ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து
ஏந்து பொன் விளக்கு ஏந்தி இடம் பெறா
மாந்தர் சும்மை மலிந்த ஒர் பால் எலாம்
விளக்கவுரை :
1605. துறந்த மன்னவர் தூமுடி தோள்வளை
நிறம் கொள் ஆரம் பைம் பூண் நிழல் குண்டலம்
பிறங்கு வெம் கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து
உறங்குகின்றன போன்ற ஒர் பால் எலாம்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1601 - 1605 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books