சீவக சிந்தாமணி 1596 - 1600 of 3145 பாடல்கள்
1596. அன்பு நூலாக இன்சொல் அலர் தொடுத்து அமைந்த காதல்
இன்பம் செய் காமச் சாந்தின் கைபுனைந்து ஏற்ற மாலை
நன்பகல் சூட்டி விள்ளாது ஒழுகினும் நங்கை மார்க்குப்
பின் செலும் பிறர் கண் உள்ளம் பிணை அனார்க்கு அடியது அன்றே
விளக்கவுரை :
1597. பெண் எனப் படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா
உள் நிறை உடைய அல்ல ஓர் ஆயிரம் மனத்த வாகும்
எண்ணிப் பத்து அம்கை இட்டால் இந்திரன் மகளும் ஆங்கே
வெண்ணெய்க் குன்று எரி உற்றாற் போன்று மெலிந்து பின் நிற்கும் அன்றே
விளக்கவுரை :
[ads-post]
1598. சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த காலைப்
பூமனும் புனைதல் இன்றிப் பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோடு ஒப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பர்
விளக்கவுரை :
1599. அன்னள் நின் தோழி ஐயா அவள் என்னைக் கண்ட கண்ணால்
பின்னைத் தான் பிறரை நோக்காப் பெருமட மாது தன்னை
என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு
அன்னளோ என்று நக்கான் அணி மணி முழவுத் தோளான்
விளக்கவுரை :
1600. இனையல் வேண்டா இம் மந்திரத்தை ஓதி நீ ஒருவில் ஏ அளவு
அனைய எல்லை சென்றால் இயக்கி கொணர்ந்து அருளும்நீ
புனை செய் கோல் வளையைக் கைப் படுதி என்று ஆங்கு அவன் போதலும்
அனைய மாதரைக் கண்டு ஆங்கு அடி புல்லி வீழ்ந்து அரற்றினான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1596 - 1600 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books