சீவக சிந்தாமணி 1591 - 1595 of 3145 பாடல்கள்
1591. மல்லல் தொல் வளத்து மத்திம நல் நாட்டு வண் தாமரை
புல்லும் பேரூர்ப் புகழ்த் தத்தன் காதல் சின தத்தைக்கும்
செல்வ நாமற்கும் சித்திரமா மாலைக்கும் சுற்றத்தார்க்கும்
அல்லல் செய்தேன் அவண் சென்றால் என் உரைக்கேன் என் செய்கேனோ
விளக்கவுரை :
1592. உண்ணு நீர் வேட்டு அசைந்தேன் என உரைப்பக் காட்டுள் நாடி
நண்ணிப் பொய்கை தலைப்பட்டு நல் தாமரை இலையினுள்
பண்ணி நீர் கொண்டு வந்தேன் படா முலைப் பாவாய் என்று
அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றானே
விளக்கவுரை :
[ads-post]
1593. குழை கொள் வாள் முகத்துக் கோல் வளையைக் காணான் குழைந்து அழுகின்ற
அழகன் சொல்லும் அணி செய் கோதை காமமும் கண்டும் கேட்டும்
முழவுத் தோளான் முறுவலித்து ஈங்கே இரு நீ என்று
இழையச் சொல்லி இறையான் இளையானை எய்தினானே
விளக்கவுரை :
1594. என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்குப்
பொன் அம் குன்றின் பொலிந்த தோள் நம்பி ஒருபொன் பூங் கொடி
என்னும் நீராளை ஈங்கே கெடுத்தேன் என் பாவத்தால்
பல் நூல் கேள்வி உடையேன் யான் பவதத்தன் என்பேன் என்றான்
விளக்கவுரை :
1595. கைப் பொருள் கொடுத்தும் கற்றல் கற்றபின் கண்ணும் ஆகும்
மெய்ப் பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும்
பொய்ப் பொருள் பிறகள் பொன்னாம் புகழும் ஆம் துணைவி ஆக்கும்
இப் பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1591 - 1595 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books