சீவக சிந்தாமணி 1586 - 1590 of 3145 பாடல்கள்
1586. காதல் மாமன் மட மகளே கருங் குழல் மேல் வண்டு இருப்பினும்
ஏதம் உற்று முரியும் நுசுப்பு என்று உன்னியல்பு ஏத்துவேன்
ஓதம் போல உடன்று உடன்று நைய நீ ஒண் தாமரைக்
கோதை போல்வாய் ஒளித்து ஒழிதல் கொம்பே குணன் ஆகுமே
விளக்கவுரை :
1587. வண்ணத் திங்கள் மதி முகத்த வாளோ கருங் கயல்களோ
உண்ணும் கூற்றோ ஒளி வேலோ போதோ உணர்கலேனால்
பண்ணின் தீம் சொலாய் படா முலைப் பாவாய் கொடியே பாங்கின்
உண்ணும் தேனே அமிர்தே என் இன் உயிரே எங்கணாயோ
விளக்கவுரை :
[ads-post]
1588. இலவம் போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கிப்
புலவன் சித்திரித்த பொன் சிலம்பு நகப் பூ நிலத்து மேல்
உலவும் போழ்தும் என் ஆவி மலர் மேல் மிதித்து ஒதுங்குவாய்
கலவ மஞ்ஞை அனையாய் கண் காதல் ஒழிகல்லேனால்
விளக்கவுரை :
1589. பணி செய் ஆயத்துப் பந்தாடு கின்றாயைக் கண்டு மாழ்கிப்
பிணி செய் நோயேன் யான் கிடப்பப் பிறர் வாய் அது கேட்டலும்
துணிக போதும் என விடுத்தாய் போந்தேன் துயர் உழப்ப நீ
மணி செய் மேகலையாய் மாற்றம் தாராய் மறைந்து ஒழிதியோ
விளக்கவுரை :
1590. இயக்கி நின்னோடு இணை ஒக்கும் என்று நலம் செகுப்பான்
மயக்கிக் கொண்டு போய் வைத்தாய் என் மாதரைத் தந்து அருள் நீ
நயப்ப எல்லாம் தருவல் எனத் தொழுது நல் யானை தன்
வயப்பிடி கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1586 - 1590 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books