சீவக சிந்தாமணி 1581 - 1585 of 3145 பாடல்கள்
1581. தாய் இலாக் குழவி போலச் சாதுயர் எய்து கின்றேன்
வேய் உலாம் தோளினார் தம் விழுத்துணைக் கேள்வ நின் கண்டு
ஆயினேன் துறக்கம் பெற்றேன் அளித்து அருளாது விட்டால்
தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள்
விளக்கவுரை :
1582. மணி எழு அனைய தோளும் வரை என அகன்ற மார்பும்
தணிவு அருங் கயத்துப் பூத்த தாமரை அனைய கண்ணும்
பணிவு அரும் பகுதி அன்ன முகமும் என்று அயர்ந்து காமப்
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான்
விளக்கவுரை :
[ads-post]
1583. போதொடு நானம் மூழ்கிப் பூம் புகை தவழ்ந்து முல்லைக்
கோதை கண் படுக்கும் கூந்தல் குரை வளி பித்தோடு ஐயேய்
ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர் இறைச்சி என்பு ஈருள் மூளை
கோதம் செய் குடர்கள் புன் தோல் நரம்பொடு வழும்பிது என்றான்
விளக்கவுரை :
1584. விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா உகிர் மயிர் உமிழ் கண் பீளைப்
புழுப் பயில் குரம்பை பொல்லாத் தடி தடிக் கீழ்ந்த போழ்தில்
விழித்தியார் நோக்கு கிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை
கொழிப்பரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்தால் கொடியே என்றான்
விளக்கவுரை :
1585. உருவம் என்று உரைத்தியாயின் நிறைந்த தோல் துருத்தி தன்னைப்
புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி வைத்தால்
கருதுவது ஆங்கு ஒன்று உண்டோ காப்பியக் கவிகள் காம
எரி எழ விகற்பித்திட்டார் இறைச்சிப் போர் இதனை என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1581 - 1585 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books