சீவக சிந்தாமணி 1576 - 1580 of 3145 பாடல்கள்
1576. இன்புகை ஆர்ந்த இழுதார் மென் பள்ளி மேல்
அன்பு உருகு நல்லார் அவர் தேள் மேல் துஞ்சினார்
தம் புலன்கள் குன்றித் தளரத் தம் காதலார்
அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் நெஞ்சே
விளக்கவுரை :
1577. என்பினை நரம்பில் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
புன் புறம் தோலைப் போர்த்து மயிர் புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயில் ஆக்கி ஊன் பயில் குரம்பை செய்தான்
மன் பெருந் தச்சன் நல்லன் மயங்கினார் மருள என்றான்
விளக்கவுரை :
[ads-post]
1578. வினைப் பெருந் தச்சன் நல்லன் மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால்
எனக்கு உற்றுக் கிடந்தது என்று ஆங்கு இருகணும் புதைத்து வைக்கும்
நினைப்பினால் பெரியர் என்னான் நீந்தினார் கலைகள் என்னான்
மனத்தையும் குழையச் செத்தும் மாண்பினன் மாதோ என்றான்
விளக்கவுரை :
1579. என்று அவன் இருப்ப மாதர் என் வரவு இசைப்பின் அல்லால்
ஒன்றும் மற்று உருகல் செல்லான் என்று எடுத்து ஓதுகின்றாள்
மன்றல் அம் தோழிமாருள் வனத்து இடைப் பண்ணை ஆடக்
குன்று இடைக் குளிர்க்கும் மின் போல் குழாம் மழை முகட்டில் செல்வான்
விளக்கவுரை :
1580. மயில் இனம் இரிய ஆங்கு ஓர் மடமயில் தழுவிக் கொண்ட
வெயில் இளம் செல்வன் போல விஞ்சையன் என் கொண்டு ஏகத்
துயிலிய கற்பினாள் தன் துணைவி கண்டு இடுவித்திட்டாள்
அயில் இயல் காட்டுள் வீழ்ந்தேன் அநங்க மா வீணை என்பேன்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1576 - 1580 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books