சீவக சிந்தாமணி 1571 - 1575 of 3145 பாடல்கள்
1571. எண்ணத்தில் இயக்கி என்றே இருப்ப மற்று எழுதலாகா
வண்ணப் பூங் கண்கள் அம்பா வாள் நுதல் புருவம் வில்லா
உள் நிறை உடைய எய்வான் உருவச் சாதகத்துக்கு ஏற்பப்
பெண் நலம் கிடந்த பேதை பெண் நலம் கனிய நின்றாள்
விளக்கவுரை :
1572. முறுவல் முன் சிறிய தோற்றா முகை நெறித்து அனைய உண்கண்
குறு நெறி பயின்ற கூந்தல் குறும்பல் கால் ஆவிக் கொள்ளாச்
சிறு நுதல் புருவம் ஏற்றாச் சேர் துகில் தானை சோர
அறியுநர் ஆவி போழும் அநங்கனை ஐங்கணையும் எய்தாள்
விளக்கவுரை :
[ads-post]
1573. வடுப் பிளவு அனைய கண்ணாள் வல்லவன் எழுதப்பட்ட
படத்திடைப் பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப
அடிப் பொலிந்தார்க்கும் செம்பொன் அணிமணிக் கழலினான் அம்
மடத்தகை குறிப்பு நோக்கி மனத்து இது சிந்திக்கின்றான்
விளக்கவுரை :
1574. கடி மாலை சூடிக் கருப்பூரம் முக்கித்
தொடை மாலை மென் முலையார் தோள் தோய்ந்த மைந்தர்
கடை மாலை மற்று அவரே கண் புதைப்பச் செல்லும்
நடை மாலைத்து இவ் உலகம் நன்று அரோ நெஞ்சே
விளக்கவுரை :
1575. நாவி அகலம் எழுதி நறு நுதலார்
ஆவி தளிர்ப்ப அவர் தோள் மேல் துஞ்சினார்
தூவி ஒழி புள்ளின் தோன்றித் துயர் உழப்பக்
காவி நெடுங் கண் புதைத்து ஆங்கு அகல்வார் நெஞ்சே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1571 - 1575 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books