சீவக சிந்தாமணி 1566 - 1570 of 3145 பாடல்கள்
1566. அண்ணல் தான் செலும் முன்னா அணிமலர்ப் பூம் பொழில் அதனுள்
வண்ண மாச்சுனை மாநீர் மணி தெளித்து அனையது ததும்பித்
தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல்
எண் இல் பன்மலர் கஞலி இனவண்டு பாண் முரன்று உளதே
விளக்கவுரை :
1567. கானகத்தின் ஏகுகின்றான் கடி பொழில் கவின் கண்டு எய்தித்
தானத்தில் இருத்தலோடும் தையலாள் ஒருத்தி தானே
வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள்
நானமும் பூவும் சாந்தும் நாற வந்து அருகு நின்றாள்
விளக்கவுரை :
[ads-post]
1568. குறிஞ்சிப் பூங் கோதை போலும் குங்கும முலையினாள் தன்
நிறைந்த பொன் கலாபம் தோன்ற நெடுந் துகில் விளிம்பு ஒன்று ஏந்திச்
செறிந்தது ஓர் மலரைக் கிள்ளித் தெறித்திடாச் சிறிய நோக்கா
நறும் புகைத் தூது விட்டு நகைமுகம் கோட்டி நின்றாள்
விளக்கவுரை :
1569. அணிகல அரவத்தாலும் அமிழ்து உறழ் நாற்றத்தாலும்
பணிவருஞ் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி
மணிமலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல்
துணிவருஞ் சாயல் நின்றாள் தோன்றல் தன் கண்ணின் கண்டான்
விளக்கவுரை :
1570. கண்டவன் கண்ணின் நோக்க நடுங்கித் தன் காதில் தாழ்ந்த
குண்டலம் சுடர ஒல்கிக் கொடி நடுக்குற்றது ஒப்ப
நுண் துகில் போர்வை சோர நுழை மழை மின்னின் நிற்ப
எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி கொல் இவள் மற்று என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1566 - 1570 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books