சீவக சிந்தாமணி 1561 - 1565 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1561 - 1565 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1561. கருவி தேன் எனத் தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ்
பொருவில் யானையின் பழுப் போல் பொங்கு காய்க்குலை அவரை
அருவி ஐவனம் கரும்பும் அடக்கருங் கவைக் கதிர் வரகும்
உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உளவே

விளக்கவுரை :

1562. யாணை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த
தேன் நெய் வாசவல் குவவித் தீம் கனி வாழையின் பழனும்
ஊனை உண்டவர் உருகும் பசுந்தினைப் பிண்டியும் ஒருங்கே
மானின் நோக்கியர் நோக்கி வழி தொறும் ஈவது அவ் வழியே

விளக்கவுரை :


[ads-post]

1563. குறிஞ்சி எல்லையின் நீங்கிக் கொடி முல்லை மகள் மகிழ்ந்து ஆடச்
செறிந்த பொன் இதழ்ப் பைந்தார்க் கொன்றை அம் செல்வற்குக் குரவம்
அறிந்து பாவையைக் கொடுப்பத் தோன்றி அம் சுடர் ஏந்த
நிறைந்த பூங் குருந்து உகு தேன் நீர் பெய்து ஆர்த்தன சுரும்பே

விளக்கவுரை :

1564. அரக்கு உண் பஞ்சிகள் திரட்டி அருமணி மரகதப் பலகைப்
பரப்பி இட்டன போலக் கோபங்கள் பயிர் மிசைப் பரவ
உரைத்த மென்தயிர்ப் பித்தைக் கோவலர் தீம் குழல் உலவ
நிரைக் கண் மாமணி கறங்க நீள் நிலம் கடந்தனன் நெடியோன்

விளக்கவுரை :

1565. வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும்
சுள்ளி வேலியின் நீங்கித் துறக்கம் புக்கிடும் எனச் சூழ்ந்து
வெள்ளி வெண்திரள் விசித்து நிலத்தொடு தறி புடைத்தவை போல்
துள்ளி வீழ் உயர் அருவி வன கிரி தோன்றியது அவணே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books