சீவக சிந்தாமணி 1556 - 1560 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1556 - 1560 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1556. இன்னவாறு உறுதி கூறி எரிமணி வயிரம் ஆர்ந்த
பொன் அவிர் கலங்கள் எல்லாம் பொலிவொடு புகன்று நீட்டிச்
செல்மின் நீர் என்று கூற வலம் கொண்டு தொழுது சென்றான்
வில் மரீஇ நீண்ட தோளான் வெயில் கடம் நீந்தல் உற்றான்

விளக்கவுரை :

கனகமாலையார் இலம்பகம்

1557. இரங்கு மேகலை அல்குல் இன் கனித் தொண்டை அம் துவர்வாய்
அரங்கக் கூத்திகண் அன்பின் மனையவள் துறந்து செல்பவர் போல்
பரந்த தீம்புனல் மருதம் பற்று விட்டு இனமயில் அகவும்
மரம் கொல் யானையின் மதம் நாறு அருஞ் சுரம் அவன் செலற்கு எழுந்தான்

விளக்கவுரை :

[ads-post]

1558. கலவ மாமயில் எருத்தில் கடிமலர் அவிழ்ந்தன காயா
உலக மன்னவன் திருநாள் ஒளிமுடி அணிந்து நின்றவர் போல்
பலவும் பூத்தன கோங்கம் பைந்துகில் முடி அணிந்து அவர் பின்
உலவு காஞ்சுகியவர் போல் பூத்தன மரவம் அங்கு ஒருங்கே

விளக்கவுரை :

1559. ஓங்கு மால் வரை வரையாடு உழக்கலின் உடைந்து உகு பெருந்தேன்
தாங்கு சந்தனம் தரளத் தழுவி வீழ்வன தகை சால்
ஆங்கண் மால் உலகு அளப்பான் ஆழி சங்கமொடு ஏந்தி
தேம் கொள் மார்பு இடைத் திளைக்கும் செம்பொன் ஆரம் ஒத்து உளவே

விளக்கவுரை :

1560. வீழ்ந்து வெண் மழை தவழும் விண் உறு பெருவரை பெரும் பாம்பு
ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த மற்று அவற்று அருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின மதுகரம் பாடச்
சூழ்ந்து மா மயில் ஆடி நாடகம் துளக்கு உறுத்தனவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books