சீவக சிந்தாமணி 1551 - 1555 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1551 - 1555 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1551. அளைவது காமம் அடு நறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடுமின் என்றால்
தளை அவிழ் கோதையார் தாமம் சேர் வெம் முலை போல் வீங்கிக் கண் சேந்து
உளைய உறுதி உரைப்பாரை ஓ பாவம் உணராரே காண்

விளக்கவுரை :

1552. இழுது அன்ன வெள் நிணத்த செந்தடிக்கே ஏட்டைப்பட்டு இரும்பில் போர்த்த
பழுது எண்ணும் வன் மனத்தார் ஓட்டை மரச் செவியர் கேளார் பால் போன்று
ஒழுகி அமுது ஊறும் நல் அறத்தை ஓர்கிலர் ஊன்செய் கோட்டக்கு
கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்றார்

விளக்கவுரை :

[ads-post]

1553. கையால் பொதித் துணையே காட்டக் கயல் கண்ணாள் அதனைக் காட்டாள்
ஐயா விளம்பழமே என்கின்றீர் ஆங்கு அதற்குப் பருவம் அன்று என்
செய்கோ எனச் சிறந்தாள் போல் சிறவாக் கட்டுரையால் குறித்த எல்லாம்
பொய்யே பொருள் உரையா முன்னே கொடுத்து உண்டல் புரிமின் கண்டீர்

விளக்கவுரை :

1554. பனிமதியின் கதிர் பருகும் ஆம்பல் போல்
முனிமதி முகத்தியர் முறுவல் நம்பினார்
துனிவளர் கதிகளுள் தோன்றி நாடகம்
கனிய நின்று ஆடுவர் கடை இல் காலமே

விளக்கவுரை :

1555. நிழல் நிமிர் நெடுமதி நிகர் இல் தீங்கதிர்ப்
பழன வெண் தாமரை பனிக்குமாறு போல்
குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார்
தொழ நிமிர்ந்து அமரராய்த் துறக்கம் ஆள்வரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books