சீவக சிந்தாமணி 1546 - 1550 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1546 - 1550 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1546. பட நாகம் தோல் உரித்தால் போல் துறந்து கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு
உடனாக ஐம் பொறியும் வென்றார்க்கு உவந்து ஈதல் தானம் ஆகும்
திடனாகத் தீம் தேனும் தௌ மட்டும் உயிர்க் குழாம் ஈண்டி நிற்றற்கு
இடனாகும் ஊனும் இவை துறத்தலே சீலம் என்று உரைத்தார் மிக்கார்

விளக்கவுரை :

1547. ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல்
தாவாத் தவம் என்றார் தண்மதி போல் முக்குடைக் கீழ்த் தாதை பாதம்
பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றால் புனைதல் நாளும்
ஏவா இவை பிறவும் பூசனை என்று ஈண்டிய நூல் கரை கண்டாரே

விளக்கவுரை :

[ads-post]

1548. இந் நால்வர் துணைவியராக் காதல் மகன் இவனா உடையார் போகிப்
பொன் ஆர மார்பின் புரந்தரராய்ப் பூமி முழுவதும் ஆண்டு
மன் ஆகி முக்குடைக் கீழ் வாமன் சிறப்பு இயற்றி வரம்பு இல் இன்பம்
பின்னா விளைவித்துப் பிறவா உலகு எய்தல் பேசலாமே

விளக்கவுரை :

1549. மட்டார் பூம் பிண்டி வளம் கெழு முக் குடைக் கீழ் மாலே கண்டீர்
முட்டாத இன்பப் புதாத் திறக்கும் தாள் உடைய மூர்த்தி பாதம்
எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இவ் உலகில் இன்பமே போல்
ஒட்டாவே கண்டீர் வினை அவனைத் தேறாதார்க்கு உணர்ந்தீர் அன்றே

விளக்கவுரை :

1550. வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல
ஆற்று உணாக் கொள்ளாது அடி புறத்து வைப்பீரே அல்லீர் போலும்
கூற்றம் கொண்டு ஓடத் தமியே கொடு நெறிக்கண் செல்லும் போழ்தின்
ஆற்று உணாக் கொள்ளீர் அழகலால் அறிவு ஒன்றும் இலிரே போலும்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books