சீவக சிந்தாமணி 1541 - 1545 of 3145 பாடல்கள்
1541. காழகச் சேற்றுள் தீம் பால் கதிர்மணிக் குடத்தின் ஏந்தி
வீழ்தரச் சொரிவதே போல் விளங்கு ஒளித் திங்கள் புத்தேள்
சூழ் இருள் தொழுதி மூழ்கத் தீம் கதிர் சொரிந்து நல்லார்
மாழை கொள் முகத்தின் தோன்றி வளை கடல் முளைத்தது அன்றே
விளக்கவுரை :
1542. ஏறு அனாற்கு இருளை நீங்கக் கை விளக்கு ஏந்தி யாங்கு
வீறு உயர் மதியம் தோன்ற விரைவொடு போய பின்றை
மாறு இலாப் பருதி வட்டம் வருதிரை முளைத்த ஆங்கண்
ஆறு செல் ஒருவற்கு அண்ணல் அணிகலம் அருளல் உற்றான்
விளக்கவுரை :
[ads-post]
1543. எவ்வூரிர் எப்பதிக்குப் போந்தீர் நும் மனைவியர் தாம் எனைவர் மக்கள்
ஒவ்வாதார் தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரைமின் என்றாற்கு
இவ்வூரேன் இப்பதிக்குப் போந்தேன் என் மனைவியரும் நால்வர் மக்கள்
ஒவ்வாதார் தாம் இல்லை ஒப்பான் ஒருவன் என உரைத்தான் சான்றோன்
விளக்கவுரை :
1544. ஒப்பான் ஒரு மகனே நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன
நக்கான் பெருஞ் சான்றோன் நம்பிபோல் யார் உலகில் இனியார் என்ன
மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவிக் கேட்பேன்
தக்காய் குறித்தது உரை என்றான் தான் உரைப்பக் கேட்கின்றானே
விளக்கவுரை :
1545. நல் தானம் சீலம் நடுங்காத் தவம் அறிவர் சிறப்பு இந் நான்கும்
மற்று ஆங்குச் சொன்ன மனைவியர் இந்நால்வர் அவர் வயிற்றுள் தோன்றி
உற்றான் ஒருமகனே மேல் கதிக்குக் கொண்டு போம் உரவோன் தன்னை
பெற்றார் மகப் பெற்றார் அல்லாதார் பிறர் மக்கள் பிறரே கண்டீர்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1541 - 1545 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books