சீவக சிந்தாமணி 1536 - 1540 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1536 - 1540 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1536. எரித்தலைக் கொண்ட காமத்து இன்பம் நீர்ப்புள்ளி அற்றால்
பிரிவின் கண் பிறந்த துன்பம் பெருங் கடல் அனையது ஒன்றால்
உருகி நைந்து உடம்பு நீங்கின் இம்மையோடு உம்மை இன்றி
இருதலைப் பயனும் எய்தார் என்று யாம் கேட்டும் அன்றே

விளக்கவுரை :

1537. மன்னு நீர் மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை இன்பம்
மின்னின் ஒத்து இறக்கும் செல்வம் வெயில் உறு பனியின் நீங்கும்
இன்னிசை இரங்கு நல் யாழ் இளியினும் இனிய சொல்லாய்
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

1538. பஞ்சு இறை கொண்ட பைம் பொன் கலை புறம் சூழ்ந்து வைத்து
நஞ்சு இறை கொண்ட நாகப் படம் பழித்து அகன்ற அல்குல்
வெம் சிறைப் பள்ளி ஆக விழுமுலைத் தடத்து வைகத்
தம் சிறைப் படுக்கலாதார் தம் பரிவு ஒழிக என்றாள்

விளக்கவுரை :

1539. வாசம் மிக்குடைய தாரான் வண்டினுக்கு உரைத்த மாற்றப்
பாசத்தால் ஆக்கப்பட்ட ஆவியள் அல்லது எல்லாம்
பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப் பட்டது ஒத்தாள்
தூசு உலாம் பரவை அல்குல் தூமணிப் பாவை அன்னாள்

விளக்கவுரை :

1540. பை அர விழுங்கப் பட்ட பசுங் கதிர் மதியம் ஒத்து
மெய் எரி துயரின் மூழ்க விதிர் விதிர்த்து உருகி நையும்
மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து
கையரிக் கொண்டும் காணாள் காளையும் காலின் சென்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books