சீவக சிந்தாமணி 1531 - 1535 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1531 - 1535 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1531. வஞ்ச வாய்க் காமன் சொன்ன மணி நிற வண்டுகாள் நீர்
துஞ்சுவேன் துயரம் தீரத் தொழுதகு தெய்வம் ஆவீர்
மஞ்சு தோய் செம் பொன் மாடத்து என் மனை தன்னுள் என்றாள்
பஞ்சு மேல் மிதிக்கும் போதும் பனிக்கும் சீறடியினாளே

விளக்கவுரை :

1532. நொந்து எடுக்கலாது வீங்கும் வன முலை நுசுப்பின் தேய்ந்த ஓர்
பந்து எடுக்கலாத நங்கை பால் கடை வெண்ணெய்ப் பாவை
வெந்து உடன் வெயில் உற்றாங்கு மெலிந்து உக விளங்கும் வெள்ளி
வந்து வான் இட்ட சுட்டி வனப்பொடு முளைத்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

1533. எரிநுதி உற்ற மாவின் இளந் தளிர் போன்று மாழ்கிப்
புரி நரம்பு இசையின் தள்ளிப் புன் கண் உற்று அழுதலாலே
அரிகுரல் கொண்ட பூசல் அகத்தவர்க்கு இசைப்ப ஈண்டி
திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்

விளக்கவுரை :

1534. விழுத்திணைப் பிறந்து வெய்ய வேட்கை வேர் அரிந்து மெய் நின்று
இழுக்கம் ஒன்றானும் இன்றி எய்திய தவத்தின் வந்து
வழுக்குதல் இன்றி விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட
எழுத்தனான் தந்த இன்பம் இன்னும் நீ பெறுதி என்றாள்

விளக்கவுரை :

1535. பிறங்கின கெடும் கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின்
இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனிப்
பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கிக்
கறங்கு இசை வண்டு பாடும் கோதை நீ கவலல் என்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books