சீவக சிந்தாமணி 1526 - 1530 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1526 - 1530 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1526. மடமா மயிலே குயிலே மழலை
நடைமாண் அனமே நலம் ஆர் கிளியே
உடன் ஆடும் என் ஐயனை என்று உருகாத்
தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே

விளக்கவுரை :

1527. மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து
கல் உறை நாகு வேய்த் தோள் கதிர் மணி முறுவல் செவ்வாய்
வில் உறை புருவ மாதர் வெந்தனள் கிடப்ப மின் தோய்
இல் உறை தெய்வம் நோக்கி இரங்கி நின்று உரைக்கும் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

1528. புண்ணவாம் புலவு வாள்கைப் பொலன் கழல் புனைந்த பைந்தார்க்
கண்ணவாம் வனப்பினானைக் காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப் படா முலைப் பரவை அல்குல்
பெண்ணாவா நிற்கும் என்றால் பிணை அனாட்கு உய்தல் உண்டோ

விளக்கவுரை :

1529. கடத்து இடைக் கவளம் தேன் நெய் கனியைத் தோய்த்து இனியதுற்ற
தடக்கையால் கொடுத்துப் புல்லும் தவழ் மதக் களிறு நீங்கின்
மடப்பிடிக்கு உய்தல் உண்டோ வால் அடிக் குஞ்சி சூட்டும்
கொடைக் கையான் பிரிந்த பின்றைக் கோதையாட்கு உய்தல் உண்டோ

விளக்கவுரை :

1530. முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ்முலைத் தெய்வம் சேர
உயங்குவாள் உணர்ந்து கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி
இயங்குவான் நீன்ற ஆவி தாங்கினள் என்ப போலும்
வயங்கு பொன் ஈன்ற நீலமா மணி முலையினாளே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books