சீவக சிந்தாமணி 1521 - 1525 of 3145 பாடல்கள்
1521. கயலால் இவை என்று கவிழ்ந்து கிடந்து
அயலேன் அறியாமை உரைத்தது எலாம்
இயலாததுவோ இனியேற்கு இனியீர்
உயலாவது கண்மலர்காள் உரையீர்
விளக்கவுரை :
1522. நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும்
பொறி நீர புனைந்து எழுதிப் புகழும்
வெறி தாரவன் எவ்வழி ஏகினன் நீர்
அறிவீர் உரையீர் அமர் தோள் இணைகாள்
விளக்கவுரை :
[ads-post]
1523. இழுதார் சுடர் வேல் இளையான் அகலத்து
உழுதீர் உடன் வெம் முலைகாள் வயிரத்
தொழுவாய் விடையைக் தொடர்கிற்றிலிர் என்று
அழுதாள் தடமாக அணங்கு இழையே
விளக்கவுரை :
1524. தகை வாடிய தன் நிழல் கண் உகுநீர்
வகை வாடி வருந்தி அழுவது கண்டு
அகையேல் அமர் தோழி அழேல் அவரோ
பகையாபவர் என்றனள் பால் மொழியே
விளக்கவுரை :
1525. வெறி மாலைகள் வீழ்ந்து நிலம் புதையப்
பொறி மாலை புனை நிழல் காணலளாய்
நெறி நாடிய போயினள் நீடினள் கண்டு
எறி வால் வலை கொண்டு வரும் இனியே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1521 - 1525 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books