சீவக சிந்தாமணி 1516 - 1520 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1516 - 1520 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1516. பெறும் அன்பினள் என்பது பேசின் அலால்
அறும் அன்பினள் என்று அறைவார் இலையால்
இறும் என்பொடு நைந்து நைவேற்கு அருளி
நறு மென் கமழ் தாரவனே நணுகாய்

விளக்கவுரை :

1517. நுன சீறடி நோவ நடந்து செலேல்
எனது ஆவி அகத்து உறைவாய் எனும் நீ
புனை தாரவனே பொய் உரைத்தனையால்
வினையேன் ஒழியத் தனி ஏகினையே

விளக்கவுரை :

[ads-post]

1518. பருமுத்து உறையும் பணை வெம் முலை நின்
திரு முத்து அகலம் திளையாது அமையா
எரி மொய்த்து அனலும் இகல் வேல் எரிபுண்
மருமத்து அனலும் வகை செய்தனையே

விளக்கவுரை :

1519. புன மா மயிலே பொழிலே புனலே
வனமார் வழையே வரையே திரையே
இனமா மணி சூழ் எரி பூணவனைத்
துன யான் பெறுகோ தொழுதேன் உரையீர்

விளக்கவுரை :

1520. கொடு வெம் சிலை வாய்க் கணையின் கொடிதாய்
நடு நாள் இரவின் நவைதான் மிகுமால்
நெடு வெண் நிலவின் நிமிர் தேர் பரியாது
அடுமால் வழி நின்று அறனே அருளாய்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books