சீவக சிந்தாமணி 1511 - 1515 of 3145 பாடல்கள்
1511. கழலும் நெஞ்சோடு கை வளை சோருமால்
சுழலும் கண்களும் சூடு உறு பொன் என
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ
விளக்கவுரை :
1512. திருந்து மல்லிகைத் தேம் கமழ் மாலையான்
புரிந்து சூடினும் பூங்கொடி நுண் இடை
வருந்துமால் மடவாய் எனும் வஞ்ச நீ
கரந்து யான் நையக் காண்டலும் வல்லையோ
விளக்கவுரை :
[ads-post]
1513. தொண்டை வாய் இவள் தெய்யில் வன முலை
கண்டு தேவர் கனிப என்று ஏத்துவாய்
வண்டு கூறிய வண்ணம் அறிந்திலேன்
விண்டு தேன் துளிக்கும் விரைத் தாரினாய்
விளக்கவுரை :
1514. முலை வைத்த தடத்திடை முள் கலுறின்
தலை வைத்து நிலத்து அடி தைவருவாய்
சிலை வித்தகனே தெருளேன் அருளுளாய்
உலைவித்தனை என் உயிர் காவலனே
விளக்கவுரை :
1515. கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின்
இடன் எத்துணை அத்துணையும் எழுதி
உடன் ஒத்து உறைவான் உழை வாரலனேல்
மடன் ஒத்து உளது என் உயிர் வாழ்வதுவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1511 - 1515 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books