சீவக சிந்தாமணி 1506 - 1510 of 3145 பாடல்கள்
1506. தாள் உடைத் தடம் கொள் செவ்வித் தாமரைப் போது போலும்
வாள் உடை முகத்தினாள் தன் வருமுலைத் தடத்தின் வைகி
நாளினும் பெருகுகின்ற நகைமதி அனைய காதல்
கேள்வனைக் கனவில் காணாள் கிளர்மணிப் பூணினாளே
விளக்கவுரை :
1507. அரம் தினப் பிறந்த பைம் பொன் அரும்பிய முலையினாளைக்
கரந்தவன் கங்குல் நீங்கக் கதிர் வளை அணங்கும் மென்தோள்
வரம் தரு தெய்வம் அன்னாள் வைகிருள் அனந்தல் தேறிப்
பரந்து எலாத் திசையும் நோக்கிப் பையவே பரிவு கொண்டாள்
விளக்கவுரை :
[ads-post]
1508. திருமணி குயின்ற செம்பொன் திருந்து பூங் கொம்பு அனாள் தன்
கருமணிப் பாவை அன்னான் கரந்துழிக் காண்டல் செல்லாள்
எரி மணி விளக்கம் மாடத்து இருள் அறு காறும் ஓடி
அருமணி இழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள்
விளக்கவுரை :
1509. யாண்டையாய் ஐய அஞ்சினென் ஆருயிர்
ஈண்டு உடம்பு ஒழித்து ஏக வலிக்குமால்
நீண்ட தோளவனே நிறை யான் இலேன்
தீண்டு வந்து எனத் தேனின் மிழற்றினாள்
விளக்கவுரை :
1510. தனியள் ஆவது தக்கதுவோ சொலாய்
கனி கொள் காமம் கலந்து உயிர் ஒன்றலின்
இனியர் மங்கையர் என்பது கூறுவாய்
பனி கொள் மாமதி போல் பசப்பு ஊர யான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1506 - 1510 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books