சீவக சிந்தாமணி 1501 - 1505 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1501 - 1505 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1501. திங்கள் அம் குழவி செவ்வான் இடைக் கிடந்து இமைப்பதே போல்
குங்குமம் மார்பில் பூண்ட குளிர் கதிர் ஆரம் மின்ன
மங்கையோடு இருந்த போழ்து ஓர் மணி வண்டு கண்டு சொன்னான்
கங்குல் தன் நீங்கல் உற்றுக் கமழ் மலர் அணிந்த தாரான்

விளக்கவுரை :

1502. மணி வண்டு இம் மாதர் கோதை மது உண வந்த போழ்து அங்கு
இணை வண்டு அங்கு இறந்துபாடின்றி இருக்குமே இரங்கல் இன்றாய்த்
துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று நின்கண்
பணி கொண்டது இன்மையால் தான் பரிவொடும் இருக்கும் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

1503. குழவியாய்ப் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகி இப்பால்
விழைவு தீர் கிழவன் ஆகி விழுக்கதிர் உலந்து வீழ
மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டிக்
குழல் புரை கிளவியோடும் கொழும் புகை அமளி சேர்ந்தான்

விளக்கவுரை :

1504. திருத் துயில் பெற்ற மார்பன் திருந்து தார் உழக்க இன்ப
வருத்தம் உற்று அசைத்த கோதை வாள் ஒளித் தடம் கண் நீலம்
பொருத்தலும் பொன் அனாளைப் புறக்கணித்து எழுந்து போகிப்
பருச் சுடர்ப் பவழ நோன் தாழ்ப் பனி மணிக் கதவு சேர்ந்தான்

விளக்கவுரை :

1505. அல்லியுள் பாவை அன்னாள் அறிவுறா வகையின் ஒற்றி
மெல்லவே திறந்து நீக்கி மின்னு விட்டு இலங்கு பைம் பூண்
கொல் சின மடங்கல் அன்னான் கொழு நிதி மாடம் நீந்திப்
பலகதிர்ப் பருதி போலப் பாய் இருள் ஏகினாளே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books