சீவக சிந்தாமணி 1496 - 1500 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1496 - 1500 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1496. பொழிந்து உகு காதல் பூண்டு புல்லு கை விடாது செல்லக்
கழிந்தன இரண்டு திங்கள் காளையும் மற்று ஓர் நாளால்
பிழிந்து கொள்வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி தன்னோடு
அழிந்து வீழ் அருவிக் குன்றில் ஆய் மலர்க் காவு புக்கான்

விளக்கவுரை :

1497. காஞ்சனக் கமுகு காய் பொன் கனிக் குலை வாழை சூழ்ந்து
பூஞ்சினை நாகம் தீம் பூ மரக் கருப்பூரச் சோலை
மாஞ்சினை மயில்கள் ஆடச் சண்பக மலர்கள் சிந்தும்
தீம் சுனை அருவிக் குன்றம் சீர் பெற ஏறினானே

விளக்கவுரை :

[ads-post]

1498. தினை விளை சாரல் செவ்வாய்ச் சிறு கிளி மாதர் ஓப்பப்
புனை வளைத் தோளி சொல்லைக் கிளி எனக் கிள்ளை போகா
நனை விளை கோதை நாணிப் பொன் அரி மலை ஓச்சக்
கனை கழல் குருசில் நண்ணிக் கவர் கிளி ஓப்பினானே

விளக்கவுரை :

1499. கொந்து அழல் வேல் கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே
செந்தழை அலங்கல் ஏந்திச் சீறடி பரவ வந்தேன்
உய்ந்து இனிப் பணி செய்வேனோ உடம்பு ஒழித்து ஏகுவேனோ
பைந்தழை அல்குல் பாவாய் பணி எனப் பரவினானே

விளக்கவுரை :

1500. வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீம் சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னாப்
பூண் முலை பொதிர்ப்பப் புல்லிப் புனை நலம் பருகினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books