சீவக சிந்தாமணி 1491 - 1495 of 3145 பாடல்கள்
1491. மணிக்குடம் அழுத்திவைத் தனைய தோளினான்
கணிக்கு இடம் கொடாநலம் கதிர்த்த காரிகை
அணிக்கு இடன் ஆகிய அரிவை தன்னொடும்
பிணித்து இடைவிடாது அவன் பெற்ற இன்பமே
விளக்கவுரை :
1492. பூந்துகில் பொருதிரை பொம்மல் வெம் முலை
ஏந்திய மணிவரை இரக்கம் நீர்த்தரங்கு
ஆய்ந்த வன்தோள் இணை நாகம் ஆக வைத்து
ஈந்தது அக்கடல் அவற்கு அமுதம் என்பவே
விளக்கவுரை :
[ads-post]
1493. சந்தனச் சேற்று இடைத் தாம வார் குழல்
பைந்தொடி படா முலை குளிப்பப் பாய்தலின்
மைந்தன தார் குழைந்து உடைய வாய் திறந்து
அம் சிலம்பு அணி அல்குல் கலையொடு ஆர்த்தவே
விளக்கவுரை :
1494. கோதையும் குழலும் பொங்கக் குவிமுலைக் குழங்கல் மாலைப்
போது உகப் பொருது பூணும் பொருகடல் முத்தும் மூழ்கக்
காதலும் களிப்பும் மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பும் இல்லாத் தன்மை பெற்றவர்கள் ஒத்தார்
விளக்கவுரை :
1495. புனை மலர்த் தாரினானும் போது அணி கொம்பு அனாளும்
நனை மலர்க் காவும் அம் தண் வாவியும் நல்ல ஆடிச்
சுனை மலர்க் குவளை குற்றுச் சூழ்மலர்க் கண்ணி சூட்டி
வினை நலம் நுகர்ந்து செல்வார் விதியினால் மிக்க நீரார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1491 - 1495 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books