சீவக சிந்தாமணி 1486 - 1490 of 3145 பாடல்கள்
1486. மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும்
நகு கொடா மணிகள் நல்ல தெளித்துக் கொண்டு எழுதி நன்பொன்
முக படாம் வைப்ப ஆள் செற்று அழன்று கண் கரிந்த முல்லைத்
தொகு கள் தாம் கோதை வெய்ய துணைமணி முலைகள் தாமே
விளக்கவுரை :
1487. தேன் கறி கற்ற கூழைச் சண்பக மாலை வேல்கண்
ஊன் கறி கற்ற காலன் ஒண் மணித் தடக்கை வைவேல்
கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவிமுலை நமன் கைப் பாசம்
யான் பிறன் அளியன் வாழ்வான் ஆசைப்பட்டு இருக்கின்றேனே
விளக்கவுரை :
[ads-post]
1488. திருவிற்கும் கற்பகத் தெரியல் மலையார்
உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண் பொன் பூங் கொடி
முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய்சடை
ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே
விளக்கவுரை :
1489. கலைத் தொகை நலம் பல கடந்த காளை தான்
நலத்தகை அவள் நலம் நினைப்ப நாய்கனும்
மலைத்தொகை மதம் தவழ் யானை மன்னவன்
நிலத்தவர்க்கு அறிவுற நெறியில் செப்பினான்
விளக்கவுரை :
1490. இடி உமிழ் எறிதிரை முழக்கின் பல்லியம்
கொடி அணி வியன் நகர் குழுமி ஆர்த்து எழக்
கடிமணம் இயற்றினார் கடவுள் நாளினால்
வடிமலர்க் கோதையை மைந்தற்கு என்பவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1486 - 1490 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books