சீவக சிந்தாமணி 1481 - 1485 of 3145 பாடல்கள்
1481. பண் உலாம் கிளவி தன் பரவை ஏந்து அல்குல்
வண்ண மேகலை இவை வாய்ந்த பூந் துகில்
உண்ணிலாய்ப் பசுங் கதிர் உமிழ்வ பாவியேன்
கண்ணையும் மனத்தையும் களம் கொண்டு இட்டவே
விளக்கவுரை :
1482. கடி கமழ் குழலினால் கட்டி மெய்யெலாம்
நடு ஒசி நோன் சிலைப் புருவத்தால் புடைத்து
அடு மலர் நெடுங் கணால் ஆவி போழ்ந்திடாக்
கொடியவள் இள முலை கொல்லும் கொல்லுமே
விளக்கவுரை :
[ads-post]
1483. கடியன கச்சினால் கட்டப் பட்டன
கொடியன குங்குமம் கொட்டப் பட்டன
அடி நிலம் பரந்து முத்து அணிந்த வெம் முலை
இடை நிலம் செகுப்பன என்னை என் செயா
விளக்கவுரை :
1484. கரிய உள் வெறியன கட்டப் பட்டன
புரிவொடு புறத்திடப் பட்ட பூங் குழல்
தெரியின் மற்று என் செயா செய்ய நீண்டன
பெரிய கண் போலவும் பேது செய்யுமே
விளக்கவுரை :
1485. காதன்மை கண்ணுளே அடக்கிக் கண் எனும்
தூதினால் துணி பொருள் உணர்த்தித் தான் தமர்க்கு
ஏதின்மை படக் கரந்திட்ட வாள் கண் நோக்கு
ஓத நீர் அமுதமும் உலகும் விற்குமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1481 - 1485 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books