சீவக சிந்தாமணி 1476 - 1480 of 3145 பாடல்கள்
1476. வள்ளலை வாச நெய் பூசி மணிக் குடத்து
தௌ அறல் நீர் சொரிந்து ஆட்டினர் தேம் புகை
உள்ளுற உண்ட கலிங்கம் உடுத்த பின்
கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார்
விளக்கவுரை :
1477. மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்த பின்
கொங்கு அலர் கோதையர் கெண்டு அகம் எய்தி
அம் கதிர்ப் பொன் கலத்து ஆர் அமிர்து எந்தினர்
செங் கயல் கண்ணியர் சீரின் அயின்றான்
விளக்கவுரை :
[ads-post]
1478. பத்தியில் குயிற்றிய பைம் பொன் திண்ணை மேல்
சித்திரத் தவிசினுள் செல்வன் சீர்பெற
நித்தில மணி உறழ் கரக நீரினால்
அத்துறை விடுத்தனன் அலர்ந்த தாரினான்
விளக்கவுரை :
1479. இளிந்த காய் கமழ் திரை வாசம் ஈண்டி ஓர்
பளிங்கு போழ்ந்து அருகு பொன் பதித்த பத்தியின்
விளிம்பு முத்து அழுத்திய யவனக் கைவினைத்
தெளிந்த பொன் அடைப்பையுள் பாகு சென்றவே
விளக்கவுரை :
1480. பாசிலை சுருட்டுபு கறித்துப் பல்லினைத்
தேசிகம் படத் துடைத்து உமிழ்ந்து தேம் கமழ்
வாசம் வாய்க் கொண்டனன் மணி செய் குண்டலம்
வீசி வில் விலங்கி விட்டு உமிழ என்பவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1476 - 1480 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books