சீவக சிந்தாமணி 1471 - 1475 of 3145 பாடல்கள்
1471. நிலம் தினக் கிடந்தன நிதியம் நீள் நகர்ப்
புலம்பு அறப் பொலிவொடு புக்க காலையே
இலங்கு பூங் கொடியன ஏழை நோக்கமும்
உலம் கொள் தோள் உறு வலி நோக்கும் ஒத்தவே
விளக்கவுரை :
1472. கண் உறக் காளையைக் காண்டலும் கைவளை
மண் உறத் தோய்ந்து அடி வீழ்ந்தன மாமையும்
உள் நிறை நாணமும் உடைந்தன வேட்கையும்
ஒள்நிறத் தீ விளைத்தாள் உருக்கு உற்றாள்
விளக்கவுரை :
[ads-post]
1473. வாக்கு அணங்கு ஆர்மணி வீணை வல்லாற்கு அவள்
நோக்கு அணங்காய் மன நோய் செய நொந்தவன்
வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடுந் தோளி ஓர்
தாக்கு அணங்கோ மகளோ எனத் தாழ்ந்தான்
விளக்கவுரை :
1474. நல்வளத் தாமரை நாணிய வாள்முகம்
கொல்வளர் வேற்கணினாள் குழைந்தாள் எனச்
சொல் வளர்த்தார் அவள் தோழியர் சோர்குழல்
மல்வளர் மார்பனை வந்து வளைத்தார்
விளக்கவுரை :
1475. நினைப்பரு நீள் நிறை நிப்புதி சேர்ந்து ஆங்கு
இனைத்து இடை ஏறு அனையான் எழில் நோக்கிப்
புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
வனப்பினையே கண்டு வாள்கண் அகன்றாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1471 - 1475 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books