சீவக சிந்தாமணி 1466 - 1470 of 3145 பாடல்கள்
1466. தேர் இவர் ஊர்ந்தனர் செல்ல இல் தலைக்
கூர் உகிர் விடுத்தது ஓர் கோல மாலையைப்
பேரிசை வீணையில் சூட்டிப் பெண் கொடிக்
காரிகை உலகு உணர் கடவுள் பாடுமே
விளக்கவுரை :
1467. வீங்கு ஓத வண்ணன் விரை ததும்பு பூம் பிண்டித்
தேங்கு ஓத முக்குடைக் கீழ்த் தேவர் பெருமானைத்
தேவர் பெருமனைத் தேன் ஆர் மலர் சிதறி
நாவின் நவிற்றாதார் வீட்டு உலகம் நண்ணாரே
விளக்கவுரை :
[ads-post]
1468. அடல் வண்ண ஐம் பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான்
கடல் வண்ணன் முக்குடைக் கீழ்க் காசு இன்று உணர்ந்தான்
காசுஇன்று உணர்ந்தான் கமல மலர் அடியை
மாசு இன்றிப் பாடாதார் வான் உலகம் நண்ணாரே
விளக்கவுரை :
1469. பூத்து ஒழியாப் பிண்டிக் கீழ்ப் பொங்கு ஓத வண்ணனை
நாத் தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே,
வீட்டுலகம் நண்ணார் வினைக்கள்வர் அலைப்ப
ஓட்டிடுப எண் குணனும் கோட்பட்டு உயிராபே
விளக்கவுரை :
1470. முத்து உமிழும் முந்நீர் மணிவண்ணன் மூன்று உலகும்
பத்திமையால் பாடப் படுவான் தாள் பாடக் கேட்டு
ஒத்து அரம்பை அன்னாள் உவந்து இவளோடு ஒப்பான் ஓர்
வித்தகனை இன்னே பெறுக என உரைத்தாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1466 - 1470 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books