சீவக சிந்தாமணி 1461 - 1465 of 3145 பாடல்கள்
1461. குறங்கு அணி மயிரொடு கோலம் ஆர்ந்தன
பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின
கறங்கு இசை மணி முழா எருத்தம் காண்தகு
மறம் கெழு பெரும்புலி வாயின் வண்ணமே
விளக்கவுரை :
1462. வரை அகன் மார்பிடை வரியும் மூன்று உள
புரைதபு பொன் புரை நாவும் முள் உடைத்து
அருவரைத் தோள்களும் அமரர் கோன் களிற்று
உருவு கொள் தடக்கையின் உருவு கொண்டவே
விளக்கவுரை :
[ads-post]
1463. இலங்கு பொன் இறு வரை அனைய ஏந்தலுக்கு
அலங்கு இதழ்த் தாமரைக் கொட்டை அன்னதாய்
வலம் சுழிந்து அமைவரக் குழிந்த வாய்ப்பொடு
நலம் கிளர் நாபியும் இனிது நாறுமே
விளக்கவுரை :
1464. தடித்து இறை திரண்டு தம் அளவிற்கு ஏற்ற சூல்
கெடிற்று அழகு அழிப்பன கிளர் பொன் தோரைய
கடிப் பகை நுழைவறக் கதிர்த்த கைவிரல்
அடுத்த மூக்கு அருமணி வயிரத் தோட்டியே
விளக்கவுரை :
1465. வார்ந்து இலங்கு எயிறு அணிபவழம் மாண்டவாய்
ஆர்ந்த பூ அங்கையும் அடியும் தாமரை
தேர்ந்தனன் திருமகள் கணவன் ஆம் எனத்
தீர்ந்த்தனன் சொல் அளைஇத் தேர் கொண்டு ஏறினன்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1461 - 1465 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books