சீவக சிந்தாமணி 1456 - 1460 of 3145 பாடல்கள்
1456. போது வாய் திறந்த போதே பூம் பொறி வண்டு சேந்தாங்கு
ஊதுமே மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே
யாது நீ கவல வேண்டா ஆர் அழகு உடைய நம்பி
காதலான் தவத்தின் மிக்கான் கண்ணுறு நாளை என்றான்
விளக்கவுரை :
1457. பொன் நிலத்து எழுந்தது ஓர் பொருவில் பூங்கொடி
மின்னு விட்டு எரிவது ஓர் நலத்தள் வீங்கு இருள்
பின்னிவிட்டன குழல் பெருங் கண் பேதையூர்
துன்னினன் தொடு கழல் குருசில் என்பவே
விளக்கவுரை :
[ads-post]
1458. மல்லிகை மணம் கமழ் மாலை வார் குழல்
சில் சுணங்கு இளமுலைச் சிறுமி தந்தையும்
செல்வனைத் திருநகர்ச் சேட்பட்டான் அரோ
பல்கதிர் மணி ஒளி பரந்த பூணினான்
விளக்கவுரை :
1459. தென் திசை முளைத்து ஓர் கோலச் செஞ் சுடர்
ஒன்றி மற்று உத்தரம் வருவது ஒத்து அவண்
மன்றல் கொள் மார்பினான் வந்து ஒர் ஆல் நிழல்
நன்று உவந்து இருந்தனன் ஆதல் சிந்தியா
விளக்கவுரை :
1460. குடை கவித்து அனையது கோல மா முடி
அடி இணை யாமையின் வடிவு கொண்டன
புடைதிரள் விலாவும் வில் வளைந்த பொற்பின்
கடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1456 - 1460 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books